ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சபரிமலையில் 'துணிவு', 'வாரிசு' போஸ்டர் - எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு...கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலையில் 'துணிவு', 'வாரிசு' போஸ்டர் - எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு...கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் துணிவு, வாரிசு போஸ்டர்களுடன் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் துணிவு, வாரிசு போஸ்டர்களுடன் பக்தர்கள்

அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக கைகோர்த்திருக்கும் படம் துணிவு. இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக இயக்குநர் வினோத் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பிரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வினோத், துணிவு பட முதல் பாதி மட்டுமே அஜித் ரசிகர்களுக்கான படமாக இருக்கும், இரண்டாம் பாதி எல்லா ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு முழு படமும் உருவாகவில்லை. அது படத்தின் ஒரு பகுதிதான். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் என்னிடம் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் படம் தொடர்பாக நிறைய புரமோ வீடியோக்களை வெளியிட்டால் படம் பார்க்கும்போது உங்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது'' என்றார்

மற்றொரு பக்கம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. மேலும் படம் தொடர்பாக சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் யூடியூப் பக்கங்களில் பேசிவருகின்றனர். தெலுங்கில் வாரிசுடு படம் வருகிற 14 ஆம் தேதி தான் வெளியாகிறது. காரணம் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் வெளியாகிறது. இரண்டு படங்களையும் தெலுங்கு ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வாரிசுடு படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக தில் ராஜு தெரிவித்தார்.

பட நிறுவனங்கள் பத்தாது என ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாலாபிகேஷம் செய்வது என புரமோஷன்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சபரிமலை சென்ற விஜய் அஜித் பக்தர்கள் அங்கு வாரிசு போஸ்டரை அங்கே வெளியிட்டு படம் வெற்றிப்பெற பிரார்த்தனை செய்தனர். இதுதொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகிவந்தன.

இந்த நிலையில்  கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்துவருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு சபரிமலை தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு, வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஆனால் அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

First published:

Tags: Kerala, Thunivu, Varisu