காந்தாரா படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடலான வராஹ ரூபம் மீதான தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கி அதிரடி உத்தரவை இன்று வெளியிட்டுள்ளது.
கன்னட மொழியில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ரிலீசான அனைத்து மொழிகளிலும் காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த படத்தின் தியேட்டர் வசூல் மட்டும் 400 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காந்தாரா திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த சிம்பு… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…
முன்னதாக, காந்தாரா படத்தில் இடம் பெற்ற ‘வராக ரூபம்’ பாடல் மெகா ஹிட்டாகியது. தங்களது நவரசம் என்ற பாடலை காந்தாராவில் காப்பியடித்து வராஹ ரூபம் பாடலை படக்குழுவினர் உருவாக்கியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ கடந்த மாதம் குற்றம் சாட்டியது. கேரள இசைக்குழுவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.
நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த அக்டோபர் 28ஆம் தேதியில் இருந்து வராக ரூபம் பாடல் காந்தாரா படத்தில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
இந்த நிலையில் வராக ரூபம் பாடல் மீதான தடையை கேரள உயர்நீதிமன்றம் இன்று நீக்கி முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை காந்தாரா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் வரவேற்றுள்ளனர்.
‘அதாவது தாய்க்குடம் பிரிட்ஜ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற எல்லை வரம்புக்கு உட்பட்டது அல்ல’ என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அதேநேரம் எர்ணாகுளத்தில் உள்ள கமர்சியல் நீதிமன்றத்தில் அடுத்த 14 நாட்களுக்குள் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினர் முறையீடு செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டுதலையும் இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood