ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காப்பிரைட் பிரச்சனை... காந்தாரா படத்தின் வராக ரூபம் பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்

காப்பிரைட் பிரச்சனை... காந்தாரா படத்தின் வராக ரூபம் பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்

காந்தாரா

காந்தாரா

காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கன்னடப் படமான காந்தாராவில் இடம்பெற்றிருந்த வராக ரூபம் பாடலை திரையரங்கில் ஒளிபரப்ப கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

  இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இதனடிப்படையில் இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. சூபப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

  இந்நிலையில், காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய காந்தாரா.. காப்பி அடிக்கப்பட்டதா பாடல்.? பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பிய தாய்க்குடம் பிரிட்ஜ்!

  வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை ஒளிபரப்ப தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களான Amazon, Spotify, YouTube, Wynk Music, Jiosavan போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Cinema, Court