Home /News /entertainment /

Sarath Chandran : பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் அதிர்ச்சி

Sarath Chandran : பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் அதிர்ச்சி

நடிகர் சரத் சந்திரன்

நடிகர் சரத் சந்திரன்

Sarath Chandran : பெற்றோர் மற்றும் இளைய சகோதரனுடன் சரத் சந்திரன் வாழ்ந்து வந்தார். அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

    பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் மரணம் அடைந்திருப்பது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    37 வயதே ஆகும் சந்திரன், அங்கமாலி டயரீஸ், ஒரு மெக்சிகன் அபராதா, சிஐஏ, கூடே அமாங் அதர்ஸ் உள்ளிட்ட மலையாளத்தில் ஹிட்டான படங்களில் நடித்திருக்கிறார்.

    பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்ததன் மூலம், கேரள சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை சரத் சந்திரன் பிடித்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் ப்ரியா பவானி சங்கருக்கு பிடித்த ஊர் இதுதான்…

    சரத் சந்திரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கக்காடில், சரத் சந்திரனுடைய வீடு இருக்கிறது. இங்குதான் அவரதுசடலம் மீட்கப்பட்டது.

    பெற்றோர் மற்றும் இளைய சகோதரனுடன் சரத் சந்திரன் வாழ்ந்து வந்தார். அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த கடிதத்தில் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்தேன் என்று, சரத் சந்திரன் எழுதி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆகஸ்ட் 12-ல் விஷாலின் லத்தியுடன் மோதும் கார்த்தியின் விருமன்…

    37 வயதில் ஏன் இந்த முடிவு என்று சரத்தின் ரசிகர்களும், திரைத் துறையினரும் ஆதங்கப்படுகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cinema

    அடுத்த செய்தி