Home /News /entertainment /

21-வது பிறந்தநாளில் இளம் நடிகை தற்கொலை... விசாரணை வளையத்திற்குள் கணவர்

21-வது பிறந்தநாளில் இளம் நடிகை தற்கொலை... விசாரணை வளையத்திற்குள் கணவர்

சஹானா

சஹானா

மாடலும் நடிகையுமான சஹானாவின் இந்த முடிவு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மலையாள நடிகை சஹானா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சஹானா. முழுநேர மாடலாகவும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்த இவர் கோழிக்கோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சஹானா தனது 21-வது பிறந்தநாளன்று, தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவருடன் வசித்து வந்த சஹானாவின் பரிதாப மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து சஹானாவின் மரணம் குறித்து விசாரிக்க, சஜ்ஜத்தை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மகளின் முடிவு குறித்து சஹானாவின் தாயார் கூறுகையில், "என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவாள். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். தனது பிறந்தநாளை கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்தார்" என்றார்.

    ரசிகர்களுடன் இணைந்து டான் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்!

    மாடலும் நடிகையுமான சஹானாவின் இந்த முடிவு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சாவில் உள்ள மர்மம் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Kerala

    அடுத்த செய்தி