• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Keerthy Suresh: வித்தியாச முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: வித்தியாச முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் டான்ஸ்

கீர்த்தி சுரேஷ் டான்ஸ்

இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்

  • Share this:
    வித்தியாசமான முறையில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ்.

    கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ஃபேன், இதனை பலமுறை தனது நேர்காணல்களில் அவரே குறிப்பிட்டுள்ளார். இப்போது, தான் விஜய்யின் உண்மையான ரசிகை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கீர்த்தி. விஜய்யின் 47-வது பிறந்தாளில் தனித்துவமான நடன வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளில், ஒரு ஆச்சரியமான வீடியோவைக் கொண்டு வருவதாக, முன்னதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் கீர்த்தி. தற்போது அதை நிறைவேற்றும் வண்ணம் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதுவும் விஜய்யின் சிக்னேச்சர் ஸ்டெப்களையே முழுவதுமாக ஆடியுள்ளார்.



    2020-ஆம் ஆண்டில், கீர்த்தி சுரேஷ் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற, 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு வயலின் வாசித்து மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அதுவும் இணையத்தில் வைரலாகியது. இப்போது, கீர்த்தி தனது சகோதரரை பார்ட்னராகக் கொண்டு, விஜய்யின் நடன அசைவுகளை பின்பற்றி அழகான வீடியோவை உருவாக்கியுள்ளார். இந்த கண்கவர் நடன வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார், அதோடு அவரை பொழுதுபோக்கு 'பீஸ்ட்' என்றும் புகழ்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர விஜய்யுடன் இணைந்து கீர்த்தி பைரவா மற்றும் சர்கார் ஆகியப் படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: