Home /News /entertainment /

யூ-ட்யூப் சேனல் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்!

யூ-ட்யூப் சேனல் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

பிரபலங்கள் பலர் யூ-ட்யூப் சேனல் தொடங்கி தங்களுக்கு பிடித்த விஷயங்களை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் சேனல் ஆரம்பித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக யூ-ட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் சாணி காயிதம் படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருப்பவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

    நடிகைகள் தொழில் தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த கால நடிகைகள் வாய்ப்புகள் குறைந்ததும் ஏதோ ஒரு பிஸினஸை கையிலெடுத்து செட்டிலாவது வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளும் சரி, புதிதாக நடிக்க வருபவர்களும் சரி, உடனடியாக தங்களுக்குப் பிடித்தமான தொழிலை தொடங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

    யாரும் எதிர்பார்க்காத நிகழ்ச்சி... மீண்டும் விஜய் டிவி-யில் கரை ஒதுங்கிய புகழ்?



    தற்போது வேறொரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது தனது பெயரில் யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியிருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். பிரபலங்கள் பலர் யூ-ட்யூப் சேனல் தொடங்கி தங்களுக்கு பிடித்த விஷயங்களை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் சேனல் ஆரம்பித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Keerthy suresh

    அடுத்த செய்தி