படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு துபாயில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது குடும்பத்தை மிஸ் செய்வதாக தெரிகிறது.
அதனால் தனது அம்மாவுடன் இருக்கும் ஒரு அழகிய படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது அம்மா மேனகா மருதாணி வைத்துவிடும் படத்தைப் பகிர்ந்துள்ள கீர்த்தி, ‘தூய்மையான வடிவத்தில் அன்பு’ எனத் தலைப்பிட்டுள்ளார். இந்தக் கேண்டிட் படம் லாக்டவுனில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு கீர்த்தியின் ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்து வருகிறார்கள்.
இசையமைப்பாளார் அனிருத்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானார் கீர்த்தி. அதன் பிறகு, அவர் தனது தொழில் வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும், யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்றும் கீர்த்தியின் பெற்றோர்கள் பதிலளித்தனர். அதோடு மேற்கூறிய விஷயம் வெறும் வதந்தி எனவும் தெரிவித்தனர்.
கீர்த்தி தொழில் ரீதியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், மேலும் அவர் தனது படங்களின் பேக் டு பேக் ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். சர்காரு வாரி பாட்டா படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்காக கீர்த்தி தற்போது துபாயில் உள்ளார். மகேஷ் பாபு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் திரும்பிய நிலையில், புதிய ஷெட்யூலை தொடங்கியுள்ளார் கீர்த்தி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்