Home /News /entertainment /

கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிகாயிதம்... படம் எப்படி இருக்கு?

கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிகாயிதம்... படம் எப்படி இருக்கு?

சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ்

சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ்

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், சாணி காயிதத்தில் வைலன்சும், இரத்த சிதறல்களும் அதிகமாக உள்ளன.

கீர்த்திசுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் சாணி காயிதம் படம், அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன.

ராக்கி படத்தில் அறிமுகமான இயக்குனர் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராக்கி படம் முழுவதும் வன்முறையை சிதறவிட்ட இயக்குனர் மாதேஸ்வரன், சாணி காயிதத்திலும் அதே சம்பவத்தை செய்துள்ளார்.

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், சாணி காயிதத்தில் வைலன்சும், இரத்த சிதறல்களும் அதிகமாக உள்ளன.

இதையும் படிங்க - ரசிகர்களை வெயிட்டிங்கில் வைக்காத நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சூப்பர் ஹிட் பாடல் ரிலீஸ்

தன்னையும், தனது குடும்பத்தையும் நாசம் செய்தவர்களை, அண்ணன் செல்வராகவுடன் சேர்ந்து ரிவெஞ்ச் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.



செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிரட்ட, பின்னணி இசை வழியே சாம் சி.எஸ். படத்திற்கு வலு சேர்க்கிறார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சாணி காயிதம் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.







பாசிடிவ் விமர்சனங்களால் சாணி காயிதம் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த பாகங்கள் வெளி வருவதற்கான லீட், படத்தில் இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

அடுத்த செய்தி