Home /News /entertainment /

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படம்!

சாணிக்காயிதம்

சாணிக்காயிதம்

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை பாலியல் வன்முறை செய்யும் காட்சி இடம் பெறுகிறது.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் சாணிக்காயிதம். ராக்கி திரையரங்குக்கு வரும் முன்பே சாணிக்காயிதம் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்தார். ராக்கி போலவே இதுவும் வெளியாகாமல் பல மாதங்களாக பெட்டியில் இருக்கிறது.

சாணிக்காயிதம் வன்முறையில் ராக்கிய விஞ்சியதாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. படத்தின் வன்முறைக் காட்சிகளால் சாணிக்காயிதம் திரையரங்குகளில் வெளியாகாது, நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என பல மாதங்கள் முன்பே கூறியிருந்தோம். அது உறுதியாகியிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் ஏப்ரல் மாதம் சாணிக்காயிதம் நேரடியாக வெளியாகிறது.

இதையும் படிங்க.. ராக்கி படம் ஓடிடியில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை பாலியல் வன்முறை செய்யும் காட்சி இடம் பெறுகிறது. ஒரு கிழவர் உள்பட பலர் அவரை பாலியல் வன்முறை செய்கின்றனர். இந்தக் காட்சி மனதை பதற வைக்கும்விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாணிக்காயிதம் திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியில் வெளியாக இந்தக் காட்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.. ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!

இயக்கிய இரண்டு படங்களிலும் வன்முறையை தெறிக்கவிட்ட அருண் மாதேஸ்வரன் அடுத்து தனுஷ் நடிப்பில் மதுரைப் பின்னணியில் ஒரு படத்தை இயக்குகிறார். ப்ரீயட் படமான இதுவும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டே தயாராகிறது. பழைய மதுரையின் கேங்ஸ்டர் கதையை இப்படம் சொல்லவிருக்கிறது என்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Keerthy suresh, Kollywood

அடுத்த செய்தி