ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினிகாந்துக்காக மணிரத்னத்துக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்?

ரஜினிகாந்துக்காக மணிரத்னத்துக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

திராவிட கொள்கைகளை படம் பிரதிபலிப்பதாக கூறி படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக மணிரத்னத்தின் படத்தில் நடிக்க நோ சொல்லி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது அந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சென்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இதில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் போட்ட பணத்தை விட அதிக லாபத்தை படம் ஈட்டியதாக தயாரிப்பாளர் தரப்பு கூறியது. படத்தில் இடம்பெற்றிருந்த ரஜினி - கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்கப்பட்ட அளவுக்கு கலாய்க்கவும்பட்டன.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக இரு படங்களை கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.  அதில் ஒரு திரைப்படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரமான குந்தவை தேவியாக நடிக்க மணிரத்னம் முதலில் கீர்த்தி சுரேஷைதான் அணுகியுள்ளார். ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் நிராகரித்துள்ளார். பிறகு அந்த வேடத்தில் த்ரிஷா நடித்தார்.

அதேபோல் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் சாய்பல்லவி நடித்திருக்கும் வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர். அண்ணாத்த படத்துக்கு அளித்திருந்த தேதிகளை அவர்கள் கேட்டதால் அந்தப் படத்திற்கும் நோ சொல்லியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வெளியாகி அங்கே மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் தமிழில் வெளியாகி உள்ளது. திராவிட கொள்கைகளை படம் பிரதிபலிப்பதாக கூறி படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அண்ணாத்த படத்திற்காக இவ்விரண்டு படங்களையும் தான் தவிர்த்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆதங்கத்தில் இதனை தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Keerthy suresh, Rajinikanth, Tamil Cinema