டீ பிசினஸில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்... ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்

Youtube Video

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘மிஸ் இந்தியா’. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடைசியாக கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த நிலையில் ‘மிஸ் இந்தியா’ திரைப்படமும் நவம்பர் 4-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பெண்குயின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுக்குமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ட்ரெய்லரில் டீ பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார். ஒரு தொழில் முனைவோராக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உடன் ‘சாணி காயிதம்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: