ரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்!

ரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்!
ரஜினிகாந்த் - கீர்த்தி சுரேஷ்
  • Share this:
ரஜினியுடன் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

செக்கச் சிவந்த வானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் 2 படங்கள் அஜய் தேவ்கனுடன் ஒரு இந்திப் படம் என வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் தேதிகள் பிரச்னை காரணமாக விலகியுள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவர் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகி ரஜினி - சிவா படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்