விஜய் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

விஜய் பிறந்தநாளுக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோவுடன் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் அவரது தீவிர ரசிகர்கள்.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், திரைபிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து செய்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வயலின் வாசித்து அதை விஜய்க்கு சமர்பித்திருக்கிறார்.



மேலும் படிக்க: விஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர்

கீர்த்தி சுரேஷின் வாழ்த்து வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. ஊரடங்கில் வீட்டில் தங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ் வயலின் இசைக்கருவியை முறையாக கற்று வருகிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading