• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி?

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி?

விஜய் - கீர்த்தி சுரேஷ்

விஜய் - கீர்த்தி சுரேஷ்

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய்யின் வரவிருக்கும் படமான ‘தளபதி 66’ல் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

    இந்தத் தகவல் உண்மையானால், விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். ஏற்கனவே பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி. ஆரம்பத்தில், கியாரா அத்வானி தளபதி 66 படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் தயாரிப்பாளர்கள், கீர்த்தி இந்த பாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜய்யின் தளபதி 66 படத்தில், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.எஸ்.தமன் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இறுதி செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: