ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...?

மீண்டும் சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...?

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷும், அவர்களின் தந்தையும் இணைந்து மலையாளத்தில் வாஷி என்ற படத்தை தயாரிக்கின்றனர். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் சூர்யா படத்தில் நாயகியாக நடிக்கயிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகையர் திலகம் படத்துக்கு முன்புவரை கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகியாக பத்தோடு பதினொன்றாகதான் கருதப்பட்டார். நடிகையர் திலகம் படத்தில் அவரது நடிப்பு வியக்க வைத்தது. கமர்ஷியல் படத்தில் டூயட் பாடிக் கொண்டிருந்த நடிகையா இவர் என பலரையும் கேட்க வைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷின் மதிப்பு உயர்ந்தது எனலாம். தெலுங்கில் நாயகி மையப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விரைவில் தொடங்கயிருக்கும் பாலாவின் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கலாம் என்கின்றன செய்திகள். இந்தப் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் முதலில் அதர்வா நடிப்பதாக இருந்தது. கடைசியில் அவரது இடத்தை சூர்யா பிடித்துக் கொண்டார். பாலா, சூர்யா கூட்டணியின் நந்தா, பிதாமகன் படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள். அவர்கள் மீண்டும் இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. ஜெய் பீம் படம் சூர்யாவை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது பாலா படத்துக்கு பிளஸ் பாயின்டாக இருக்கும்.

Also read... டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் சிவகுமாரின் சபதம்...!

கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷும், அவர்களின் தந்தையும் இணைந்து மலையாளத்தில் வாஷி என்ற படத்தை தயாரிக்கின்றனர். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். டொவினோ தாமஸ் நாயகன். சமீபத்தில் இதன் பூஜை திருவனந்தபுரத்தில் நடந்தது. பாலா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது விரைவில் உறுதிச் செய்யப்படலாம்.

First published:

Tags: Actor Suriya, Actress Keerthi Suresh