Keerthy Suresh: ட்ரெண்டிங் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: ட்ரெண்டிங் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்

அவரது மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய கடைசி இரண்டு படங்கள் பிரபலமான OTT தளங்களில் வெளியிடப்பட்டன.

  • Share this:
    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், முதன் முறையாக இன்ஸ்டாகிராம் ரீலில் நடனமாடி பதிவிட்டிருக்கிறார்.

    முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நாடு முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். தனது படங்களால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறார். அவரது மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய கடைசி இரண்டு படங்கள் பிரபலமான OTT தளங்களில் வெளியிடப்பட்டன.

    மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்ற அவர், தற்போது ’அண்ணாத்த’, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் ’சர்காரு வாரி பட்டா’, ரங் தே, குட்லக் சாகி மற்றும் சானி காயிதம் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.




    தனது ஸ்டைலிஷான வித விதமான படங்களால் சமூக வலைதளங்களை சுவாரஸ்யமாக மாற்றுவதில் கீர்த்தி சுரேஷ் கில்லாடி. ஃபேஷனில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள அவரின் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு உண்மையான விருந்தளித்துள்ளார் கீர்த்தி. டோண்ட் ரஷ் என்ற ட்ரெண்டிங் ரீமிக்ஸ் பாடலுக்கு இன்ஸ்டாகிராம் ரீலில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார் அவர். ’சும்மா கேஷுவலா தம்பியுடன் இவ்வாறு ஆடியதாக’ அதில் குறிப்பிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோவுக்கு தற்போது வரை 7.20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: