ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் பாடலுக்கு ரசிகர்களுடன் இணைந்து நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!

விஜய் பாடலுக்கு ரசிகர்களுடன் இணைந்து நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் அவருடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

  தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் மாமன்னன், சைரன் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தெலுங்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

  இதற்கிடையே சமீபத்தில் நடந்த அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை பாடினார் அனிருத். அதைக்கேட்டு உற்சாகமாக நடனமாடினார் கீர்த்தி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் அவருடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்திருந்தார். அதோடு விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆடி, பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தவிர அனிருத்தும் கீர்த்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Keerthy suresh