• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Annaatthe Movie: ரஜினிக்கு ஜோடியா கூட கீர்த்தி நடிப்பார் - அம்மா மேனகா தடாலடி

Annaatthe Movie: ரஜினிக்கு ஜோடியா கூட கீர்த்தி நடிப்பார் - அம்மா மேனகா தடாலடி

ரஜினிகாந்த் - கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்த் - கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh, Rajinikanth : இன்னொரு படத்தில் ஜோடியாக நடிக்கக் கேட்டால் கீர்த்தி, ரஜினிக்கு ஜோடியாகவும் நடிப்பார் என கீர்த்தியின் அம்மா மேனகா கூறியுள்ளார்.

  • Share this:
    அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதனை சிலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், ரஜினிக்கு தங்கையாக என்ன.. வாய்ப்பு வந்தால் ஜோடியாகக்கூட நடிப்பார் என கீர்த்தி சுரேஷின் அம்மாவும், முன்னாள் நடிகையுமான மேனகா கூறியுள்ளார்.

    முன்னணி நடிகர்கள் தங்களைவிட பல மடங்கு வயது குறைவான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது இந்தியாவில் சகஜம். ஹாலிவுட்டில் இது இல்லை. ஆனால், 70 வயதில் 20 வயது பெண்ணை காதலிப்பார்கள், திருமணம் செய்வார்கள். ஆனால், திரையில் வயதுக்கேற்ற ஜோடிதான் கிடைக்கும். இங்கு அப்படியே உல்டா. திரையில் எத்தனை வயது குறைந்த நடிகைகளுடனும் நடிக்கலாம்

    40 வருடங்களுக்கு முன் நெற்றிக்கண் படத்தில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ரஜினியின் ஜோடியாக நடித்தார். இப்போது ரஜினிக்கு 70 வயது. கீர்த்தி சுரேஷுக்கு 29. இதை வைத்து ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கையா என்று சிலர் விமர்சித்தனர். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கீர்த்தி சுரேஷைவிட 10 வயது மூத்தவர் என்பதும் இந்த விமர்சனத்துக்கு காரணம். ஆனால், சினிமா என்ற மாய உலகில் வயதுக்கு எந்த மரியாதையும் இல்லை. அதையே கீர்த்தி சுரேஷின் அம்மாவும் கூறியுள்ளார்

    also read : இந்தியாவில் 100 கோடிகளை கடந்த அக்‌ஷய் குமாரின் சூரியவன்ஷி.. 

    40 வருடங்களுக்கு முன் ரஜினி எப்படி இருந்தாரோ அதைவிட அழகாகவும், உற்சாகமாகவும் இப்போது இருக்கிறார். ரஜினி பொண்ணு வயதில் இருந்துவிட்டு அவருக்கு தங்கையாக நடிக்கலாமா என்று கேட்கிறார்கள். சினிமா ஒரு நிழல். வெறும் நடிப்பு. இதில் போய் வயது போன்ற விஷயங்களைப் போட்டு ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். தங்கச்சி என்ன, இன்னொரு படத்தில் ஜோடியாக நடிக்கக் கேட்டால் கீர்த்தி ரஜினிக்கு ஜோடியாகவும் நடிப்பார் என்று கூறியுள்ளார்.

    அவங்களுக்கே ஒண்ணுமில்லை, விமர்சகர்களுக்கு மட்டும் என்ன வந்தது? கடையை காலி பண்ணுங்க சார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: