முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான யோகா பயிற்சி! - வைரலாகும் வீடியோ

கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான யோகா பயிற்சி! - வைரலாகும் வீடியோ

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சமீபத்திய பதிவில், சில அனிமல் ஃப்ளோ யோகாவை செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் புதுவித யோகாவை முயற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

பல பிரபலங்கள் தங்களை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு ஃபிட்னஸ்களை கையாளுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஜிம்மிற்கு அடிக்கடி சென்று, சைக்கிளிங், யோகா போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், நிறைய உடல் எடையை குறைத்து, ஃபிட்டாக இருக்கும் யோகா பிரியர். அவர் கடந்த சில ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் நிலையில், இப்போது அனிமல் ஃப்ளோ யோகாவை பயிற்சி செய்கிறார்.

கீர்த்தி சுரேஷின் சமீபத்திய பதிவில், சில அனிமல் ஃப்ளோ யோகாவை செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கடைசியாக 'சாணி காயிதம்' படத்தில் நடித்த திறமையான கீர்த்தி, யோகா பயிற்சி செய்யும்போது மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறார்.


இதற்கிடையில், வேலை முன்னணியில், கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இயக்குனர் சந்துருவின் 'ரிவால்வர் ரீட்டா' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Keerthy suresh