• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Tamil Cinema: வைரலாகும் முன்னணி ஹீரோயின்களின் குழந்தைப் பருவ படம்!

Tamil Cinema: வைரலாகும் முன்னணி ஹீரோயின்களின் குழந்தைப் பருவ படம்!

கல்யாணி - கீர்த்தி

கல்யாணி - கீர்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரின் குழந்தைப்பருவப் படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

  • Share this:
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரின் குழந்தைப்பருவப் படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் படத்தைப் பகிர்ந்தது வேறு யாருமல்ல, தேசிய விருதுப் பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.

    ஏப்ரல் 5-ம் தேதியான இன்று கல்யாணி பிரியதர்ஷன் தனது 28-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதமாக கல்யாணியின் குழந்தை பருவ தோழி கீர்த்தி, தங்களது குழந்தைப்பருவ படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார். "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மு!!!!! நிறைய அன்பு, வேடிக்கை மற்றும் அதிர்ஷ்டத்துடன் இந்த பிறந்தநாள் உனக்கு அற்புதமாக அமைய வாழ்த்துகள். இது உனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்! இதோ கடந்த காலத்திலிருந்து சில க்ரேஸி நினைவுகள்” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார்.



    இதைப்பார்த்த கீர்த்தி மற்றும் கல்யாணி ஆகிய இருவரின் ரசிகர்களும் அவர்களது ஃப்ரெண்ட்ஷிப்புக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு அந்தப் படமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த கல்யாணி தற்போது சிம்புவுக்கு ஜோடியாக 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். அதோடு மோகன் லால், பிரபு மற்றும் அர்ஜுன் நடிக்கும், தனது தந்தை பிரியதர்ஷனின் கனவுப் படமான 'மரக்கர் அரபிகலிண்டே சிம்ஹம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மறுபுறம் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரங் தே’ படம் சமீபத்தில் வெளியானது. அதோடு ரஜினியின் ‘அண்ணாத்த’, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணி காயிதம்’ ஆகியப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: