முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதன் முறையாக இணையும் கீர்த்தி சுரேஷ்

சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதன் முறையாக இணையும் கீர்த்தி சுரேஷ்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்

சைரன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் என்பவர் இயக்குகிறார்.  அதே போல் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் சைரன் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயம் ரவி நடிக்கும் சைரன் என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். 

ஜெயம் ரவி நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.  இதைத் தொடர்ந்து அவருடைய நடிப்பில் அகிலன், இறைவன் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அந்தப் படங்களுக்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். சமீபத்தில் அதற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில்,  தற்போது அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சைரன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் என்பவர் இயக்குகிறார்.  அதே போல் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் சைரன் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

ஜெயம் ரவி - சுஜாதா விஜயகுமார் கூட்டணியில் ஏற்கனவே அடங்கமறு, பூமி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.  இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்கள் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.

Also read... Ajith 61: அஜித் 61 படம் ரிலீஸ் எப்போது? வெளியானது சூப்பர் அப்டேட்!

சைரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அதேபோல் முதன்முறையாக ஜெயம் ரவி படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Actress Keerthi Suresh, Entertainment