அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார்.
நடிகையர் திலகம் படத்துக்குப் பிறகு தனிப்பெரும் நாயகியானார் கீர்த்தி சுரேஷ். விரைவில் வெளிவரயிருக்கும் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டாவில் அவர்தான் நாயகி. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவர், அண்ணாத்தயில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். படத்தின் நாயகி நயன்தாரா. ஆனாலும், தங்கை கதாபாத்திரத்துக்கே படத்தில் முக்கியத்துவமாம். அண்ணாத்த போல் ஒரு தங்கை கதாபாத்திரம் தெலுங்கில் கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. அதில் அண்ணனாக நடிப்பது சிரஞ்சீவி.
ஆச்சார்யா படத்தை முடித்த சிரஞ்சீவி, மலையாள
லூசிபர் படத்தின் ரீமேக்கான காட்ஃபாதரில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் அவர் நடிக்கும் போலா சங்கர் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது 2015-ல் தமிழில் வெளிவந்த
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக். வேதாளத்தில் நாயகனின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அந்த வேடத்தை தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் ஏற்கிறார். வேதாளத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், துக்கடா வேடம். இதை தெலுங்கில் தமன்னா ஏற்கிறார்.
நாயகி மைய வெப் தொடர்கள்,
திரைப்படங்கள் என்று வேகமெடுத்திருக்கும் தமன்னாவுக்கு சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க வழக்கத்தைவிட பெரும் பணம் சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறது. மெகர் ரமேஷ் என்பவர் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.