• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Keerthy Suresh: முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

Keerthy Suresh: முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

'பொன்னியின் செல்வன்' கதையில் குந்தவை கதாபாத்திரம், முன்னணி கதாபாத்திரமான அருள் மொழி வர்மனின் மூத்த சகோதரி.

  • Share this:
    நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிப்பதாக தெரிகிறது.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்று மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் இடையில் படப்பிடிப்புக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் அவர் கல்கியின் காவியமான'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக உடையணிந்துள்ளார். நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம், பெரும் நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து இயக்கி வருகிறார்.

    'பொன்னியின் செல்வன்' படத்தில், குந்தவை கதாபாத்திரம், முன்னணி கதாபாத்திரமான அருள் மொழி வர்மனின் மூத்த சகோதரி. அப்படியெனில் மணி ரத்னம் படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரியாக கீர்த்தி நடிப்பார் எனத் தெரிகிறது. இது ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

    இருப்பினும் கீர்த்தியின் அந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், ஃபேன்மேட் போஸ்டர் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தயாரிப்பு தரப்பில் விரைவில் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: