ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Keerthy Suresh | விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh | விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய் அடுத்ததாக, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய்யின் 66-வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக உலவி வந்த வதந்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய் தனது 65-வது படமான பீஸ்டில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்குப்பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார். இது உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் என வம்சி பைடிபள்ளி கூறியுள்ளார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் படத்தையும் இவரே தயாரித்து வருகிறார்.

தமிழில் தாராளமாக தயாரிப்பாளர்கள் இருக்கையில் விஜய் ஏன் தெலுங்கு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் தேர்வு செய்தார்? வம்சி பைடிபள்ளியின் கதை பிடித்து அவரது இயக்கத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் தெலுங்கு தயாரிப்பாளர்? இந்த ரீதியில் நிறைய சந்தேகங்களை வீசினர். அவர்களே, அதற்கு ஒரு பதிலாக, கீர்த்தி சுரேஷ் தான், விஜய் தில் ராஜு தயாரிப்பில் நடிக்க காரணம். அதனால், விஜய்யின் 66-வது படத்தின் நாயகியும் அவரே என எழுதினார் என, பல வாரங்களாக இந்த வதந்தி மீடியாவில் சுற்றிக் கொண்டிருந்தது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், விஜய்யின் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். அப்படியானால் விஜய் கால்ஷீட்டை தில் ராஜுக்கு வாங்கித் தந்தது கீர்த்தி சுரேஷ் என மீடியாக்கள் எழுதியது...? எல்லாமே பொய். இன்னும் படத்தின் நாயகி யார் என்பதை இயக்குனர் முடிவு செய்யவில்லை என்பதே உண்மை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Keerthy suresh