• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழில் வெளியாகும் The Matrix Resurrections...!

கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழில் வெளியாகும் The Matrix Resurrections...!

தி மேட்ரிக்ஸ் ரெஸ்யூரெக்ஸன்ஸ்

தி மேட்ரிக்ஸ் ரெஸ்யூரெக்ஸன்ஸ்

தி மேட்ரிக்ஸ் ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம். 1999 இல் வெளியானது. கியானு ரீவ்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி மேட்ரிக்ஸ் ரீலோடட், தி மேட்ரிக்ஸ் ரெவ்லுயூஷன்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிறிஸ்துமஸை முன்னிட்டி டிசம்பர் 22 ஆம் தேதி தி மேட்ரிக்ஸ் ரெஸ்யூரெக்ஸன்ஸ் திரைப்படம் வெளியாகிறது. யுஎஸ்ஸில் வெளியாகும் அதே நாள் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.

தமிழகத்துக்கு தீபாவளியும், பொங்கலுமே பெரும் பண்டிகைகள். முன்னணி நடிகர்களின் படங்கள் இந்தப் பண்டிகைகளில் வெளியாகும். வெளிநாட்டவர்களுக்கு கிறிஸ்துமஸ் பெரும் பண்டிகை. அதைவிட்டால் கோடை விடுமுறை. இந்த இரு காலங்களிலும் பெரிய பட்ஜெட் படங்கள் கண்டிப்பாக வெளியாகும்,

ஸ்பைடர் மேன் சீரிஸின் புதிய பாகமான ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகிறது. அதேநாளில் படம் இந்தியாவிலும் வெளியாகிறது. மேலே குறிப்பிட்டது போல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகள்.

தி மேட்ரிக்ஸ் ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம். 1999 இல் வெளியானது. கியானு ரீவ்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி மேட்ரிக்ஸ் ரீலோடட், தி மேட்ரிக்ஸ் ரெவ்லுயூஷன்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. அந்தவகையில் டிசம்பர் 22 வெளியாக இருப்பது தி மேட்ரிக்ஸ் சீரிஸின் நான்காவது படம். முந்தையப் பாகங்களைப் போலவே இதிலும் கியானு ரீவ்ஸ்தான் நாயகன்.

Also read... Churuli movie review: சுருளி பட விமர்சனம்!

இந்த நான்காவது பாகத்துக்கு தி மேட்ரிக்ஸ் ரெஸ்யூரெக்ஷன்ஸ் என பெயர் வைத்துள்ளனர். தி மேட்ரிக்ஸின் மூன்றாவது பாகமான தி மேட்ரிக்ஸ் ரெவ்லுயூஷன்ஸ் 2003 இல் வெளியானது. தி மேட்ரிக்ஸ் சீரிஸ் அவ்வளவுதான், நான்காவது வெளியாக வாய்ப்பில்லை என்று கருதிய நிலையில் சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு நான்காவது பாகம் வெளியாகிறது. அந்தவகையில் Resurrections என்ற பெயர் பொருத்தமானதே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: