‘கழுகு 2’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ

கழுகு 2 படத்தில் சகலகலா வள்ளி என்ற பாடலுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி நடனமாடியுள்ளார்.

news18
Updated: January 12, 2019, 4:14 PM IST
‘கழுகு 2’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ
யாஷிகா ஆனந்த்
news18
Updated: January 12, 2019, 4:14 PM IST
‘கழுகு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா வள்ளி பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில்  சகலகலா வள்ளி என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலில் பிக்பாஸ் 2 புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளர்.Loading...

பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பேட்டVSவிஸ்வாசம்... பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் முந்தியது யார்? - வீடியோ

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...