Home /News /entertainment /

மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு வைரமுத்து சொல்லும் யோசனைகள்…

மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு வைரமுத்து சொல்லும் யோசனைகள்…

வைரமுத்து

வைரமுத்து

Vairamuthu : ‘மதுக்கடைகளை நான் வெறுக்கிறேன். மதுக்கடைகளை நான் மறுக்கிறேன். இந்த நாடு மதுவால் மயங்கி கிடக்கிறது.’

    மதுக்கடைகளுக்கு தான் எதிரானவன் என்று கூறியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, மதுக்கடைகளை மூடுவதற்கான வழிகளையும் கூறியுள்ளார்.

    கலை மற்றும் இலக்கிய பயணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து 50வது பொன்விழாவை கொண்டாடி வருகிறார். இதையொட்டி நியூஸ் 18- தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார்.

    அரசின் வருமானத்திற்கு மக்கள் போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்று வைரமுத்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

    சந்தானத்தின் ’குலுகுலு’ படத்தின் டீசர் ரிலீஸ்!

    இதற்கு வைரமுத்து அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

    மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அதன் வழியில் பயணப்பட ஆசைப்படுபவன் நான்.

    என்னை தூக்கி நிறுத்தியவர்கள், எனக்கு அரணாக இருப்பவர்கள், எனக்கு சோறு போடுபவர்கள், என்னை கொண்டாடுபவர்கள், எனக்கு கரவொலி எழுப்புவர்கள், என்னை எதுவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அதுவாகவே இருந்து விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

    அரசு தனது வருமானத்திற்கு புதிய திசைகளை கண்டுபிடித்து, புதிய ஆற்றல்களைக் கண்டறிந்து, புதிய பொருளாதாரத்தை உருவாக்கிக் கொண்டால் இந்த மதுக்கடைகளை மூடி விடலாம்.

    உன்னை தொடும் அனல் காத்து... கடக்கையிலே பூங்காத்து... நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

    ஆயிரம் சொல்லுங்கள், என்னுடைய கருத்து என்னவென்றால் மதுக்கடைகளை நான் வெறுக்கிறேன். மதுக்கடைகளை நான் மறுக்கிறேன். இந்த நாடு மதுவால் மயங்கி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வைரமுத்து முழு பேட்டியைக்காண...



    இதனை தவிர்த்து, திரைத்துறை, தமிழக அரசியல், விருதுகள், வாஜ்பாய், மோடி குறித்தும் வைரமுத்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Vairamuthu

    அடுத்த செய்தி