வாஜ்பாய் மற்றும்
மோடியின் கவிதை தொகுப்புகளை வெளியிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்த சுவாரசியமான அனுபவத்தை கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
கலை மற்றும் இலக்கிய பயணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து 50வது பொன்விழாவை கொண்டாடி வருகிறார். இதையொட்டி நியூஸ் 18- தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு மோடியின் கவிதைத் தொகுப்பான சிந்தனைக் களஞ்சியம் வெளியீட்டு நிகழ்ச்சியில் வைரமுத்து பங்கேற்றார். இது அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தனது கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு என்னை அவரது இல்லத்திற்கு அழைத்து இருந்தார். பிரதமர் இல்லத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Gargi Movie Review: எப்படி இருக்கிறது சாய் பல்லவியின் கார்கி படம்?
‘நீங்கள் விரும்பினால் முன்னாள் பிரதமராக மாற முடியும். ஆனால் முன்னாள் கவிஞராக என்றைக்கும் மாற முடியாது’ என்று நான் அவரிடம் சொன்னேன். இதைக் கேட்டு சிரித்த அவர், என் மீது அதிக பாசம் வைத்தார்.

மோடியின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து
அப்போது வாஜ்பாய் உடன் கலைஞர் கூட்டணியில் இருந்தார். பாஜகவும், திமுகவும் கூட்டணியில் இருந்த காலம். அதனால் நான் வாஜ்பாய் நிகழ்ச்சியில் பங்கேற்றதை, யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மோடி அவர்களுடைய கவிதைத் தொகுப்பின் தமிழ் தொகுதியை வெளியிட்ட போது, திமுக கூட்டணியில் பாஜக இல்லை.
அப்போது, வாஜ்பாயோடு நீங்கள் மோடியை ஒப்பிடக் கூடாது என்று சிலர் தமிழ் தீவிரவாதிகள் என்னிடம் வந்து சொன்னார்கள். நிர்மலா சீதாராமன் அவர்கள் மோடியின் கவிதைத் தொகுதியை வெளியிட வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது, நான் வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
சர்ச்சைக்கு இடமில்லாத கருத்துக்கள் கவிதை தொகுப்பில் இருந்தால் நான் வருகிறேன் என்று அவரிடம் கூறினேன். கவிதை தொகுப்பை வாங்கி படித்த போது, கவிதைகள் நன்றாக இருந்தன. எந்தவிதமான மதவாதமும் இல்லை.
5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!
வாஜ்பாயின் கவிதைகளை வெளியிட்ட வைரமுத்துவே, நம்முடைய கவிதைகளை வெளியிடட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். அரசியலில் மொழியும், மொழியில் அரசியலும் கலந்து இருந்தால் நாம் தள்ளித்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.