• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாரா, விக்னேஷ் சிவனின் புதிய படம் ஊர்குருவி...!

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் புதிய படம் ஊர்குருவி...!

கவின் மற்றும் விக்னேஷ் சிவன்

கவின் மற்றும் விக்னேஷ் சிவன்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்துவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் அடுத்து ஊர்குருவி என்ற படத்தை தயாரிக்கிறது. 

சிம்பு, பிரபுதேவா உடனான காதல் பிரிவுகளுக்குப் பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தப் படம் முடியும் முன்பே படத்தில் நடித்தவர்கள் இந்தக் காதலை அம்பலப்படுத்தினர். முக்கியமாக பார்த்திபன். புதுச்சேரியில வெயில் கொளுத்தும். நாங்கயெல்லாம் ஒதுங்கி நிற்போம். நயன்தாரர் மட்டும் சிவனேன்னு பேசிட்டிருப்பாங்க என்று சினிமா விழா மேடையில் சிலேடையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலை பற்றி குறிப்பிட்டார்.

அன்றிலிருந்து இப்போதுவரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாகவே வசிக்கிறார்கள். இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தனர். தங்களை இணைத்த நானும் ரவுடிதான் படத்தின் நினைவாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயரும் வைத்தனர்

ரவுடி பிக்சர்ஸ் இதுவரை மூன்று படங்களை தயாரித்துள்ளது. முதல் படம் கூழாங்கல். இந்தப் படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. படம் இதுவரை இரண்டு டஜன் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது. எப்போது தமிழ்நாட்டிற்கு படம் வரும் என்பது தெரியவில்லை.



Also read... ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி படம்...!

இதையடுத்து கொரிய படம் பிளைன்ட்டின் உரிமை வாங்கி நெற்றிக்கண் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். நயன்தாராவே நடித்திருந்தார். படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் பிளாப்பாகியிருக்கும். ஓடிடி என்பதால் தயாரித்தவர்கள் லம்பாக லாபம் பார்த்தனர்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்துவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதையடுத்து ஊர்குருவி என்ற படத்தை தயாரிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். இதில் கவின் நாயகனாக நடிக்கிறார். ஆனந்த் என்பவர் இயக்கம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: