முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கவின் நடித்த 'டாடா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடித்த 'டாடா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின்

கவின்

இதற்கிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக ஊர் குருவி படத்தில் கவின் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கவினின் முந்தையப் படமான லிஃப்ட் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் அந்தப் படம் ஓடிடியிலேயே வெளியாகியிருந்தது. தற்போது கவினின் டாடா படம் நல்ல வரவேற்பை பெற்று கவினுக்கென மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக அம்பேத் குமார் தயாரித்திருந்தார். கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா, பிரதீப், ஹரிஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் இந்தப் படம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு ஓடிடி வெளியான பிறகும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக ஊர் குருவி படத்தில் கவின் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் இதுவரை துவங்கப்படுமா இல்லை கைவிடப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.

First published:

Tags: Kavin