முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கவினின் 'டாடா' : படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்

கவினின் 'டாடா' : படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்

நடிகர் கவின்

நடிகர் கவின்

படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு அடுத்தப் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காதல் சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனையடுத்து அவர் நடித்த லிஃப் திரைப்படமும், ஆகாச வாணி என்ற வெப் சீரிஸும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் அவர் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் டாடா. அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படம் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.

திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு அடுத்தப் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை கணேஷ்.கே.பாபு இயக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது.

First published:

Tags: Kavin, Lyca