விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த கவின் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் நடிகர் கவின்.

விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த கவின் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் | கவின்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் நிலையில், திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமூகவலைதளங்களில் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். அதற்காக நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டனர்.
அதேவேளையில் நடிகர் அஜித் ரசிகர்களும் #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை போட்டி போட்டிக் கொண்டு இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கச் செய்தனர். இந்நிலையில் விஜய், அஜித் ஹேஷ்டேக்குகளுக்கு மத்தியில் #HBDKavin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய கவின் ரசிகர்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கச் செய்தனர். மேலும் இந்த ஹேஷ்டேக் 1 மில்லியன் ட்வீட்டுகளை நெருங்கி வருவதாகவும் கவின் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்

விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வரும் அவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டாலும், ரசிகர்கள் அவரை ட்ரெண்டிங்கில் நிறுத்தி தோள் கொடுத்தனர். இன்று இருக்கும் இளம் நடிகர்களில் கவினுக்கு சமூகவலைதளங்களில் அதிகம் ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading