மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட கவின், சாண்டி கேங்?

news18
Updated: October 12, 2019, 3:13 PM IST
மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட கவின், சாண்டி கேங்?
கவின் | மதுமிதா
news18
Updated: October 12, 2019, 3:13 PM IST
பிக்பாஸ் வீட்டில் குழுவாக இருந்த கவின், சாண்டி உள்ளிட்டோர் மதுமிதாவிடம் மன்னிப்பு கோரியது போல் மதுமிதாவின் கணவர் ட்வீட் செய்துள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 6-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை சந்தித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா, காவிரி பிரச்னையை பேசியதாலும், அதற்கு ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாலும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு தீங்கு விளைவித்துக் கொண்ட மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


அவர் வெளியேற்றப்படும்போது சகபோட்டியளர்களான கஸ்தூரி, சேரனைத் தவிர மற்ற அனைவரும் தன்னை துன்புறுத்தியதாக மேடையிலேயே தெரிவித்திருந்தார். இதையடுத்து மதுமிதாவுக்கு ஆதரவாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் கவின், சாண்டி உள்ளிட்டோர் மதுமிதாவிடம் மன்னிப்பு தெரிவித்ததாக சூசகமாக கூறியுள்ளார் அவரது கணவர் மோசஸ்.

இதுகுறித்து கருத்துபதிவிட்டிருக்கும் மதுமிதாவின் கணவர் மோசஸ், “மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால். பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

Loading...
வீடியோ பார்க்க: சினிமாவில்தான் தைரியசாலி; நிஜத்தில்...! மனம் திறந்த தமன்னா

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...