Home /News /entertainment /

'பாட்ஷா போல் நடந்து வா’ ரஜினி விரைவில் நலம் பெற வைரமுத்து வாழ்த்து

'பாட்ஷா போல் நடந்து வா’ ரஜினி விரைவில் நலம் பெற வைரமுத்து வாழ்த்து

வைரமுத்து - ரஜினிகாந்த்

வைரமுத்து - ரஜினிகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் நலம் பெற வேண்டுமென கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்து பகுதியில் ரத்த நாளத்தில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை குறிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ரஜினி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென பிரபலங்கள் விருப்பம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று, ரஜினி காந்தின் உடல்நலத்தை நேரில் கேட்டறிந்தார்.



    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்த பதிவில், “காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தம கலைஞனே. காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா. படையப்பா எழுந்து வா. பாட்ஷாபோல் நடந்து வா. வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி