Home /News /entertainment /

’இசைஞானி இளையராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டும்’ - கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

’இசைஞானி இளையராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டும்’ - கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

இளையராஜா - வைரமுத்து

இளையராஜா - வைரமுத்து

இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல் ஹாசனுக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

    இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல் ஹாசனுக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

    திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் இதுவரை இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இயக்குநர் கே.பாலச்சந்தரும் மட்டுமே பெற்றிருந்த நிலையில், மூன்றாவதாக தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி.

    துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் விருதைப் பெற்றுக் கொண்ட ரஜினி, இதனை தனது குரு கே.பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ரஜினிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல் ஹாசனுக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.



    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

    “பால்கே விருது பெற்றதில்
    கலை உலகுக்கே
    பெருமை சேர்த்துள்ளார்
    நண்பர் ரஜினிகாந்த்.
    ஊர்கூடி வாழ்த்துவோம்.

    கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
    பால்கே விருதுக்குத்
    தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
    மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
    ஒன்றிய அரசின்
    கண்களுக்குக் காட்டுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ilayaraja, Vairamuthu

    அடுத்த செய்தி