பாட்டு வரிகள் மூலம் மனங்களை கவர்ந்த கவியரசர் கண்ணதாசன்!

கன்னதாசன்

காட்டிற்கு ராஜா சிங்கம் என்றால் கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர்  புகழும் அளவிற்கு கண்ணதாசனின் புகழ் தமிழ் திரை உலகம் கடந்து தமிழக அரசியலிலும் பிரதிபலித்தது.

  • Share this:
    .. எம் எஸ் வி யை விட ஓராண்டு மூத்த கண்ணதாசனின் வாழ்க்கை குறித்த ஒரு பயணத்தை தற்பொழுது பார்க்கலாம்.

    நான்காயிரம் கவிதைகள், ஐயாயிரத்திற்கும் அதிகமான திரைப்பட பாடல்கள், தமிழக அரசின் அரசவைக் கவிஞர் என்ற கௌரவம், சாகித்திய அகாடமி விருது வென்ற படைப்பாளி என எண்ணற்ற சாதனைகளோடு இன்றும் தனது பாடல் வரிகளால் தமிழ் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார் கண்ணதாசன்.

    தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்ற இருபெரும் நாயகர்கள் உருவாக கண்ணதாசனின் வரிகள் இன்றியமையாதது. எம்ஜிஆருக்கு நாயகன் துதிபாடும் பாடல்களை எழுதி புகழ் சேர்த்தது போலவே நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல தத்துவ பாடல்களை எழுதி சிவாஜிகணேசனின் நடிப்புக்கு தீனி போட்டவர் கண்ணதாசன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    காட்டிற்கு ராஜா சிங்கம் என்றால் கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர்  புகழும் அளவிற்கு கண்ணதாசனின் புகழ் தமிழ் திரை உலகம் கடந்து தமிழக அரசியலிலும் பிரதிபலித்தது. மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பிடித்த கண்ணே கலைமானே என்ற தாலாட்டு பாடல் இன்றளவும் தமிழக மக்களை உறங்க வைக்கிறது.

    இதையும் படிங்க: காலத்தால் அழிக்க முடியாத இசை சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன்!

    ஏறத்தாழ 40 ஆண்டுகள் திரைப்படங்களில் பாடல் எழுதிய கண்ணதாசன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய நிலையில் அவர் மறைந்து 40 ஆண்டுகள் ஆன பின்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கண்ணதாசன் என்ற பெயர் ஒலிக்காத நாள் இல்லை. சிலர் வரலாற்றில் வாழ்வார்கள், சிலர் வரலாறாகவே வாழ்வார்கள். ஆனால் கண்ணதாசன் வாழ்ந்த வரலாறு.
    Published by:Murugesh M
    First published: