ஜீரோ பாடலுக்கு கலக்கல் டான்ஸ் ஆடும் கத்ரினா கைஃப்- வைரல் வீடியோ

டான்ஸுக்கு புகழ் பெற்றவர் கத்ரினா கைஃப். அவர் நடனத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் டாப் ரகத்தில் ஹிட் அடித்துள்ளன.

Web Desk | news18
Updated: December 18, 2018, 9:08 AM IST
ஜீரோ பாடலுக்கு கலக்கல் டான்ஸ் ஆடும் கத்ரினா கைஃப்- வைரல் வீடியோ
கத்ரினா கைஃப்
Web Desk | news18
Updated: December 18, 2018, 9:08 AM IST
ஜீரோ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு கத்ரினா கைஃப் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக் கான், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் `ஜீரோ’.

ஷாருக்கான் குள்ள மனிதராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ஃப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.


டான்ஸுக்கு புகழ் பெற்றவர் கத்ரினா கைஃப். அவர் நடனத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் டாப் ரகம். அவர் நடனத்தில் வெளிவந்த சிக்கினி சம்மேளே, மை நேம் இஸ் ஷீலா உள்ளிட்ட பாடல்கள் வைரல் ஹிட் என்பதால் அவருடைய டான்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடன பயிற்சி எடுக்கும் வீடியோவை கத்ரினா கைஃப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Loading...
தனக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கலான நடன அசைவுகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். பலரும் படத்தில் முழு பாடலை காண ஆவலாக இருப்பதாக கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

Also See..

First published: December 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...