Home /News /entertainment /

திருமணத்துக்கு வருகிறவர்களுக்கு கத்ரினா கைஃப் விதித்த கட்டுப்பாடு

திருமணத்துக்கு வருகிறவர்களுக்கு கத்ரினா கைஃப் விதித்த கட்டுப்பாடு

கத்ரீனா - விக்கி

கத்ரீனா - விக்கி

திருமணத்துக்கு வருகிறவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் தங்களின் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என மணமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கத்ரினா கைஃப், விக்கி கௌசல் திருமணம் இந்த மாதம் 9-ஆம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்கிறவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனை பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

கத்ரினா கைஃபும், விக்கி கௌசலும் காதலித்து வந்தனர். திருமணம் அதோ இதோ என்று தள்ளிப்போய் ஒருவழியாக டிசம்பர் 9 அன்று உறுதியாகியிருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள தனியார் அரண்மனை ரிசார்ட்டில் திருமணம் நடக்கிறது. மூன்று நாள்கள் திருமண கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.

கத்ரினா, விக்கி கௌசல் இருவரது குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு திரையுலகில் முக்கியமான சில நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றனர். இத்தனை எலைட்டாக விருந்தினர்களை தேர்வு செய்த பின்பும் அவர்களின் பாதுகாப்பு உணர்வு அடங்கவில்லை.

திருமணத்துக்கு வருகிறவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் தங்களின் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என மணமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போட்டோ, வீடியோ எடுக்கவும் அனுமதியில்லையாம்.

அவசரத்துக்கு பேசவும் செல்போனை எடுத்துவர முடியாது என்ற இந்த நிபந்தனை பல விருந்தினர்களை எரிச்சல்படுத்தியுள்ளது. தங்களின் திருமண புகைப்படங்கள் வெளிவராமல் இருப்பதற்காக இந்த நிபந்தனையை கத்ரினாவும், விக்கி கௌசலும் விடுத்துள்ளனர். தம்பதிகளே எஸ்க்ளூசிவாக திருமணப் புகைப்படங்களை வெளியிட்டால் லம்பாக பணம் கிடைக்கும். அதற்காகவே இந்த முன்னேற்பாடு என்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Katrina Kaif

அடுத்த செய்தி