முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமலுக்கு கதக் நடனம் பயிற்றுவித்த பண்டிட் பிர்ஜு மகராஜ் திடீர் மரணம்

கமலுக்கு கதக் நடனம் பயிற்றுவித்த பண்டிட் பிர்ஜு மகராஜ் திடீர் மரணம்

பிர்ஜு மகராஜ்

பிர்ஜு மகராஜ்

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண், சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற கதக் ஆசிரியர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மரணம் கலைத் துறையைச் சேர்ந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விளையாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த பண்டிட் பிர்ஜு மகராஜ் உயிர் பிரிந்தது, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கதக் நடனத்தில் ஜாம்பவானாக கருதப்படும் பண்டிட் பிர்ஜு மகராஜ், சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 83 வயதான மகராஜ், மயங்கி விழுந்து உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பண்டிட் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் இறந்த செய்தியை தெரிவித்ததாக அவரது பேரன் ஸ்வரன்ஷ் மிஸ்ரா, சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சரி யார் இந்த பிர்ஜு மகராஜ் என்கிறீர்களா? கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் ‘உன்னை காணாத’ என்ற பாடலில் கதக் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பார் நடிகர் கமல். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தது கதக் லெஜண்ட் பண்டிட் பிர்ஜு மகராஜ் தான்.

' isDesktop="true" id="667117" youtubeid="5CEDYtJNCbI" category="cinema">

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண், சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற கதக் ஆசிரியர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மரணம் கலைத் துறையைச் சேர்ந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கதக் நடனத்தை இந்தியாவில் புகழ் பெற செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தேவதாஸ், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதக் நடனத்தைப் பயிற்றுவித்த இவரின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kamal Haasan, Tamil Cinema