Home /News /entertainment /

Mare of Easttown - கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றுத் தந்த வெப் தொடர்

Mare of Easttown - கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றுத் தந்த வெப் தொடர்

மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்

மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்

உணர்வுப்பூர்வமான க்ரைம் ட்ராமா பார்க்க விரும்புகிறவர்களுக்கு மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன் நல்ல சாய்ஸ்.

  • News18
  • Last Updated :
மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன் ஒரு க்ரைம் தொடர். மொத்தம் ஏழு எபிசோடுகளை கொண்டது. 2021 ஏப்ரல் 18 ஆம் தேதி இத்தொடர் ஹெச்பிஓவில் வெளியானது.

தொடரில் நடித்திருந்தது டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் என்பதால் முதல் நாளிலேயே அதிகம் பேர் தொடரைப் பார்த்தனர். சென்ற வருடத்தின் வெற்றிகரமான தொடர்களில் இதுவும் ஒன்று.

ஓர் எச்சரிக்கை. டைட்டானிக்கில் கேட் வின்ஸ்லெட்டைப் பார்த்து கிறங்கிப் போனவர்கள் என்றால் இத்தொடரை பார்க்காமலிருப்பது நல்லது. இதில் அவர் பாட்டியாக வருகிறார். ஆம், கிரான்ட்மா. பிலடெல்பியாவின் உள்ளடங்கிய பகுதியின் போலீஸ் டிடெக்டிவ் மேர் ஷீகன். சுருக்கமாக மேர். தனது வயதான தாய், டீன்ஏஜ் மகள் மற்றும் மகனின் குழந்தையுடன் வசித்து வருகிறாள். மருமகள் ட்ரக் அடிக்ட். மகன் தற்கொலை செய்து கொள்ள பேரன் மேர் பராமரிப்பில் வளர்கிறான்.

மேர் உள்ளூர் சூப்பர் ஸ்டாரினி. 25 வருடங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டில் சேம்பியனாக இருந்தவள்;. ஆனால், ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போன தனது தோழியின் மகளை அவளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஊரிலும், அவளது டிபார்ட்மெண்டிலும் அவளது திறமை  குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரம் ஓர் இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அந்த கொலையை மேர் துப்பறிகிறாள். ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போன இளம் பெண், கொலை செய்யப்பட்ட இளம் தாய் என இரு வழக்குகளை மேர் ஒரே சமயத்தில் விசாரிக்கிறாள். இதில் அவள் எப்படி உண்மையை கண்டறிகிறாள் என்பது கதை.

துப்பறியும் க்ரைம் கதை என்றாலும் மேரின் குடும்ப உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்ற உணர்ச்சிகரமான கலவை இந்தத் தொடரை வித்தியாசப்படுத்துகிறது. கொலைக்கான பின்னணியும் வெறும் க்ரைமாக இல்லாமல் உறவுகளின் பிறழ்வாக காட்டியிருக்கிறார்கள். இந்தத் தொடரில் கவனிக்கத்தக்கது இதில் வரும் பெண்கள்.

சமீபத்தில் பெண்கள் இத்தனை தூரம் ஆதிக்கம் செலுத்துகிற தொடரை பார்க்கவில்லை. மேரின் அம்மா அட்டகாசமான கதாபாத்திரம். அந்த வயதிலும் அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அந்த நபரோ, தனது மனைவியின் இறப்புக்கு ஊர்க்காரர்கள் இரங்கல் தெரிவிக்க வந்திருக்கையில் இந்த ரகசியத்தை போட்டுடைக்கிறார். நம்மூர் என்றால் சம்பந்தப்பட்ட பெண் (ஆக்சுவலி பாட்டி) தூக்கில் தொங்கியிருப்பார். இவரிடம் நோ ரியாக்ஷன். மகள் (மேர்) டேட்டிங் செல்கையில் அவருக்குதான் எத்தனை குஷி. அதேபோல் ஓரினச்சேர்க்கையாளரான தனது மகள் புதிய பார்ட்னரை கண்டடைந்ததும் மேர் அவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளும் இடம் என கலாசார எல்லைகளை அனாயாசமாக கடந்து செல்கிறார்கள்.

தொடரை பார்த்து முடிக்கையில் நமது மனதில் நிறைந்திருப்பது மேராக நடித்திருக்கும் கேட் வின்ஸ்லெட்தான். மேரின் வீட்டு பின்பக்கத்தில்தான் அவளது முன்னாள் கணவரின் வீடு. அவள் கண்முன்னாலேயே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் பொறாமையும், கொஞ்சம் ஆற்றாமையுமாக இதனை மேர் எதிர்கொள்ளும்விதம், பேரனை தன்கூடவே வைத்துக் கொள்ள மருமகளை மாட்டிவிடும் வஞ்சனை, மகளிடம் காட்டும் வாஞ்சை, தொழிலில் காட்டும் ஈடுபாடு, தனது பாய் பிரெண்டுடன் கொள்ளும் நெருக்கம் என சகல ஏரியாக்களிலும் சிக்ஸர் வீளாசுகிற நடிப்பு.

Also read... ஜப்பானில் வெளியாகும் தி கிரேட் இன்டியன் கிச்சன்...!

Also read... தனுஷின் வாத்தி படத்திலிருந்து வெளியேறிய நாயகி...?

நடந்து முடிந்த 2022 க்கான கோல்டன் குளோப் விருது விழாவில் limited series or TV movie  பிரிவில் சிறந்த நடிகைக்கான விருது மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன் தொடருக்காக கேட் வின்ஸ்லெட்டுக்கு கிடைத்தது. தொடர் வெளியான போதே இது எதிர்பார்த்ததுதான்.

உணர்வுப்பூர்வமான க்ரைம் ட்ராமா பார்க்க விரும்புகிறவர்களுக்கு மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன் நல்ல சாய்ஸ். கேட் வின்ஸ்லெட்டின் நடிப்பை ரசிக்கிறவர்களுக்கும்தான்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி