ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனதாலும் அழகுதான்.. 12வயது சிறுமி உயிரைக் காப்பாற்ற ரூ.16 லட்சம் செலவு செய்த டைட்டானிக் நடிகை!

மனதாலும் அழகுதான்.. 12வயது சிறுமி உயிரைக் காப்பாற்ற ரூ.16 லட்சம் செலவு செய்த டைட்டானிக் நடிகை!

கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட்

£20,000 இலக்கைக் கொண்ட பிரச்சாரம் தொடங்கி சில நாட்களில், "கேட் வின்ஸ்லெட் மற்றும் குடும்பம்" எனக் குறிக்கப்பட்ட £17,000 நன்கொடையாக ஹண்டருக்கு வழங்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உயிருக்கு போராடும் தனது மகளின் உயிர் ஆதரவு இயந்திரத்தை இயக்கும் எரிசக்தி கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்த தாய்க்கு £17,000 நன்கொடை அளித்துள்ளார் உலக புகழ்பெற்ற டைட்டானிக் படத்தின் நாயகி கேட் வின்ஸ்லெட்.

  ஸ்காட்லாந்தின் டில்லிகோல்ட்ரியைச் சேர்ந்த கரோலின் ஹண்டரின் 12 வயது மகள் ஃப்ரேயாவுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. பெருமூளை வாதம் மற்றும் நாள்பட்ட சுவாச பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவருக்கு முழுநேர ஆக்ஸிஜன் மற்றும் வீட்டிலேயே நர்சிங் பராமரிப்பு தேவைப்படுகிறது.

  49 வயதான ஹண்டர், GoFundMe இயக்கத்தில் ஒரு முறையீட்டை முன்வைத்தார். ஃப்ரீயாவை உயிருடன் வைத்திருக்கும் அவரது ஆக்ஸிஜன் மற்றும் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் இயந்திரம் போன்ற உபகரணங்களின் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு பணம் செலுத்த மக்களிடம் உதவி கோரினார்.

  £20,000 இலக்கைக் கொண்ட பிரச்சாரம் தொடங்கி சில நாட்களில், "கேட் வின்ஸ்லெட் மற்றும் குடும்பம்" எனக் குறிக்கப்பட்ட £17,000 நன்கொடையாக ஹண்டருக்கு வழங்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 16லட்சத்துக்கும் மேல். இது நடிகையிடமிருந்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.

  இதையும் படிங்க: கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

  "எனது மூத்த மகளும் நானும் எரிபொருள் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். ஃப்ரீயாவை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்க அவளது மருத்துவத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, என் பில்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அனுமதிக்கிறேன்."

  ஆனால் இந்த இயந்திரங்களுக்கான எரிபொருள் சக்தி என்பது எனது வசதியைத் தாண்டி வானம் வரை போகிறது. ஜனவரி 2023 இல் கணிக்கப்பட்ட வருடாந்திர எரிபொருள் கட்டணமாக தனக்கு £17,000 வந்ததாக அவர் கூறினார்.

  மேலும் தற்போது குளிர்காலம் வந்ததால் ஃப்ரீயா இருக்கும் அறையை வெதுவெதுப்பாக வைக்க மேலும் எரிபொருள் செலவாகும் அதற்கான பில்களை எப்படி கட்ட இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று வருந்தியுள்ளார். அப்போது தான் தனியார் தொண்டு நிறுவனத்திடம் தனது மகளுக்காக நிதி திரட்டி தருமாறு கோரியுள்ளார்.

  இதையும் படிங்க:  ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு…

  GoFundMe இயக்கம் தனது பிரச்சாரம் மூலம் இப்போது £20,353 திரட்டியுள்ளது. அதை தற்போதைய எரிபொருள் பில்கள் கட்டுவதற்காக ஹண்டரிடம் ஒப்படைத்துள்ளனர்.

  இதற்காக நன்கொடை வழங்கிய பிரிட்டிஷ் நடிகை வின்ஸ்லெட் இந்த ஆண்டின் பிற்பகுதியில், சேனல் 4 திரைப்படமான ஐ ஆம் ரூத் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்..

  மேலும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்களை பாதிக்கும் மனநல நெருக்கடியைப் பற்றிய திரைப்படத்தை வின்ஸ்லெட் இணைந்து எழுதியுள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Electricity bill, Titanic