பாகுபலிக்கு குறைந்ததல்ல சத்யராஜின் ‘கட்டப்பா’ கேரக்டர் - சமாய் தாக்கர்

பாகுபலி கதாபாத்திரத்துக்கு சற்றும் குறைந்ததல்ல சத்யராஜின் கட்டப்பா கேரக்டர் என்று சமாய் தாக்கர் கூறியுள்ளார்.

பாகுபலிக்கு குறைந்ததல்ல சத்யராஜின் ‘கட்டப்பா’ கேரக்டர் - சமாய் தாக்கர்
சத்யராஜ்
  • Share this:
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ராணா டக்குபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரண்டு பாகங்களாக வெளியான படம் பாகுபலி. முதல்பாகத்தில் கட்டப்பா(சத்யராஜ்) பாகுபலியை கொன்றது ஏன் என்ற கேள்வியுடன் முடிந்திருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலிலும் புதிய சாதனை படைத்தது.

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் பதியும்படி அமைக்கப்பட்டிருந்தது. அதில், சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரமும் இன்று வரை பேசப்படும் கேரக்டராக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியில் கட்டப்பா கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்த சமாய் தாக்கர் அந்தக் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

சமாய் தாக்கர் கட்டப்பா கதாபாத்திரம் குறித்து பேசுகையில், பாகுபலி கேரக்டருக்கு குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம். பிரபாஸ் மற்றும் சத்யராஜ் தான் படத்தின் இரண்டு ஹீரோக்கள். இரண்டாவது ஹீரோவாக நடித்ததாக நான் உணர்ந்ததில்லை. படம் முழுக்க கட்டப்பாவாக இருப்பதைப் போலவே நான் உணர்ந்தேன்.


மேலும் படிக்க: சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்ட மலையாள நடிகர்கள்

முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்துக்கு சரியாக குரல் கொடுத்ததைப் போலவே, இரண்டாவது பாகத்தின் காமெடி காட்சிகளிலும் நான் சரியாக குரல் கொடுக்கிறேனா என்பதில் படக்குழுவினர் கவனமாக இருந்தார்கள். என்னால் முடிந்த அளவுக்கு சரியாக நான் குரல் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading