ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ப்பமாக இருக்கும் நடிகை கஸ்தூரி? வில்லங்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

கர்ப்பமாக இருக்கும் நடிகை கஸ்தூரி? வில்லங்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

கஸ்தூரி

கஸ்தூரி

கஸ்தூரிக்கு ஏற்கெனவெ திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகை கஸ்தூரி கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ”புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்” என ட்வீட் செய்துள்ளார்.

  சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம். சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்வார். அனைத்து விவாத நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்வார். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அப்பேட்டுகளுடன் சோஷியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி திடீரென்று கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஷேர் செய்தார்.

  இதையும் படிங்க.. பாலா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா?

  அந்த பதிவில் ”புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என ட்வீட் செய்து  #mrPREGNANT ” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். கஸ்தூரிக்கு ஏற்கெனவெ திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கஸ்தூரி மீண்டும் கர்ப்பமா? என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதே நேரம் இது கண்டிப்பாக மூவி புரமோஷனாக இருக்கும் எனவும் சிலர் கணித்துள்ளனர்.

  ஆனால் நெட்டிசன்களுக்கு இந்த புகைப்படம் வைரல் டாப்பிக்கா மாறிவிட்டது. வில்லங்கமான சில கேள்விகளை ட்விட்டரில் கஸ்தூரியிடம் கேட்டு வருகின்றனர். அனால் அவை எல்லாவற்றும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கஸ்தூரி கண்டிப்பக இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிப்பர் என தெரிகிறது. ட்விட்டரில் இணையவாசிகள் பலரும் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

  இதையும் படிங்க.. BEAST trailer : வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் தளபதி ரசிகர்கள்!

  சமீபத்தில் கூட விஜய் டிவி ஆங்கர் டிடி இதே மாதிரி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து பலருக்கு ஷாக் கொடுத்து இருந்தார். ஆனால்; அதன் பின்பு தான் தெரிந்த வந்தது அதுவும் புரமோஷன் ஷூட் என்று.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Kasthuri, Kollywood, Tamil Cinema