Rajinikanth: ரஜினியின் அமெரிக்கப் பயணத்தில் மர்மம்? - முடிவுக்கு வந்த கஸ்தூரி கலகம்!

ரஜினிகாந்த் - கஸ்தூரி

”ரஜினி சிகிச்சை பெறும் அமெரிக்காவின் மயோ கிளினிக் இதய நோய்க்குதானே பிரபலமானது. இதை நினைக்கையில் மேலும் மோசமாக உள்ளது"

  • Share this:
    ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றது குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பிய நடிகை கஸ்தூரி, இப்போது அவராகவே, நல்லது நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஜினிகாந்த் குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று பரிசோதனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றார். அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் வெளியே வரும் புகைப்படமும் வெளியானது. இது குறித்து தனது ஐயத்தை ட்விட்டரில் நடிகை கஸ்தூரி வெளியிட்டிருந்தார்.

    மே மாதத்திலிருந்து இந்தியர்கள் அமெரிக்கா செல்ல அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. அமெரிக்காவில் படிக்கும், பணிபுரியும் இந்தியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சைக்கு விலக்கு எதுவும் இல்லாத நிலையில், ரஜினிக்கு மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என கஸ்தூரி கேள்வி எழுப்பியிருந்தார்.



    "ரஜினி இந்திய அரசிடம் மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்கிறார்கள். இது மேலும் கவலையளிக்கக்கூடியது. இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கா அவருக்கு உடல் பிரச்சனை உள்ளது. ரஜினி சிகிச்சை பெறும் அமெரிக்காவின் மயோ கிளினிக் இதய நோய்க்குதானே பிரபலமானது. இதை நினைக்கையில் மேலும் மோசமாக உள்ளது" என்றும் அவர் கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சாதாரண ரசிகர்களை பயம் கொள்ள வைக்கும் வகையில் கஸ்தூரியின் ட்வீட்கள் இருந்தன. இந்நிலையில், இன்று அவரே ரஜினியின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "அலைபேசியில் அழைத்து விஷயத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி. நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்" என்று கூறியுள்ளார்.

    ரஜினி நலமுடன் இருப்பது மகிழ்ச்சிதரும் செய்தி. அவர் சென்னை திரும்புவதை குடும்பத்தினர், ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடட்டும், தவறில்லை. தமிழகமே திரண்டு அவரை வரவேற்க என்ன அவசியம் இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: