தலைமைக்கான தகுதி இருக்கிறது... ரஜினியின் கட்சியில் தனுஷ் இணைவாரா - கஸ்தூரிராஜா பதில்

தலைமைக்கான தகுதி இருக்கிறது... ரஜினியின் கட்சியில் தனுஷ் இணைவாரா - கஸ்தூரிராஜா பதில்
இயக்குநர் கஸ்தூரிராஜா
  • News18
  • Last Updated: October 7, 2019, 3:02 PM IST
  • Share this:
தலைமைக்கான அனைத்து தகுதிகளும் ரஜினிகாந்திடம் இருக்கிறது என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரிராஜா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவரிடம் அசுரன் திரைப்படத்தின் வெற்றி குறித்தும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்தும் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்திருப்பது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அசுரன் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தனுஷின் திறமை முழுவதுமாக வெளிவந்துள்ளது. முழுப்பெருமையும் வெற்றிமாறனைத் தான் சேரும். ஜி.வி.பிரகாஷ் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.” என்றார்.


இதையடுத்து இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, “பிரதமருக்கு இயக்குநர்கள் எழுதிய கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்குத் தெரியாது. இதில் நாம் கருத்து சொல்வதை விட பிரதமர் அலுவலகமும் அதிகாரிகளும் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரஜினிகாந்த் தலைவராவதற்கு முழுத் தகுதியும் இருக்கிறது. அவர் வந்து அந்த நாற்காலியில் அமர வேண்டும். தலைமைக்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சிறந்த தலைவர் தேவைப்படுகிறார். அவரைப்போல சுத்தமான ஆட்கள் வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விமோச்சனம் கிடைக்கும். நிறைய மாற்றங்கள் வரும். அவர் அதற்குப் பொருத்தமானவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை” என்று கூறியுள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கினால் தனுஷ் இணைவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, “அது தனுஷின் தனிப்பட்ட முடிவு. அசுரன் படத்தை அடுத்து இன்னும் மிகச் சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா அவரது பயணம் எப்படி இருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட படங்களுக்கு மேல்அவரே தலைவராக உருவெடுப்பாரா? இல்லையென்றால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது அதில் இணைந்து பணியாற்றுவாரா என்பதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. நாங்கள் இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொள்வதும் இல்லை” என்றார்.வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading