வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்: கஸ்தூரி பதிவிட்ட ட்வீட்

பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்த வனிதா விஜயகுமாருக்கு கட்சி மேலிடம் எந்த பதிலும் சொல்லவில்லை என்று அக்கட்சியினரே விளக்கமளித்ததாக நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்: கஸ்தூரி பதிவிட்ட ட்வீட்
வனிதா - கஸ்தூரி
  • Share this:
பிக்பாஸ் 3-வது சீசனில் வனிதா விஜயகுமார், கஸ்தூரி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போதிருந்தே இருவருக்கும் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டபோது பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாக களமிறங்கினார் கஸ்தூரி. அதேபோல் வனிதாவின் திருமணம் மீதான கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.

சமீபத்தில் பீட்டர் பால் - வனிதா பிரிவு குறித்து ட்விட்டரில் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டிருந்த கஸ்தூரி, தற்போது பாஜகவில் வனிதா இணைவதாக பரவி வரும் தகவல் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வைரலாகும் வதந்தி குறித்து பாஜக தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். வனிதா மேடம் சேர விருப்பம் தெரிவித்தாராம். கட்சி மேலிடம் எந்த முடிவும் சொல்லவில்லையாம். அவர்கள் விளக்கத்தை அப்படியே உங்களுக்கு தெரிவித்துவிட்டேன். நன்றி” என்று நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டில் குறிப்பிடுள்ளார்.

இந்த விளக்கத்துக்கு முன்னதாக அவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம்.

ஏற்கனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி...மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை?


அடுத்த வீடியோ தமிழக பாஜகவுக்குத் தான்” என்று நடிகை கஸ்தூரி தமிழக பாஜகவையும், வனிதாவையும் கிண்டலடித்துள்ளார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading