"35 நாளில் முடிச்சிட்டோம்" - அதிர்ச்சிதந்த இயக்குனர் கண்ணன்!
"35 நாளில் முடிச்சிட்டோம்" - அதிர்ச்சிதந்த இயக்குனர் கண்ணன்!
காசேதான் கடவுளடா
1972 இல் வெளியான காமெடி கிளாஸிக் காசேதான் கடவுளடா. சித்ராலயா கோபு இயக்கிய இந்தப் படத்தில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், லட்சுமி, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை ஒரு மாதம் எடுத்தார்களாம். இதை மலையாள திரையுலகில் போய் சொன்னால் மயங்கி விழுந்துவிடுவார்கள். சமீபத்தில் வெளியான பிருத்விராஜின் குருதி படத்தை முடிக்க அவர்கள் எடுத்துக் கொண்டது 24 தினங்கள். 36 வயதினிலே படத்தை முப்பதே நாளில் முடித்தார் ரோஷன் ஆண்ட்ரூ. மலையாளிகளைப் போல் ஒரு இயக்குனர் தமிழில் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கியவர்களின் துயரத்தைப் போக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். காசேதான் கடவுளடா படத்தை வெறும் 35 நாள்களில் முடித்துள்ளார் இவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.