Home /News /entertainment /

கர்வம் இல்லாத மனிதர் பிரதாப் போத்தன் - நடிகர் கருணாஸ் உருக்கம்!

கர்வம் இல்லாத மனிதர் பிரதாப் போத்தன் - நடிகர் கருணாஸ் உருக்கம்!

நடிகர் கருணாஸ்

நடிகர் கருணாஸ்

பன்முக திறமைகொண்டவர், கர்வம் இல்லாத மனிதர் என இந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் புகழாரம். 

  • News18
  • Last Updated :
பன்முக திறமை கொண்ட பிரதாப் போத்தனின் மறைவு  குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல்,  அவரை நேசிக்கும் அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். 

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதாப் போத்தன் 70 மற்றும் 80 காலகட்டங்களில் மிகச்சிறந்த விளங்கினார்.

சிறந்த எழுத்தாளர், நடிகர்,  இயக்குனர் அவரின் மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அவரை நேசிக்கும் அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாதவர், எளிமையானவர், கர்வம் இல்லாத மனிதர் என புகழாரம் சூட்டினார். அத்துடன் புதியவர்களுக்கு உதவி செய்பவர் எனவும் கூறினார்.

Also read... பிரதாப்பை எனக்கு முதல் படத்திலிருந்தே தெரியும் - இயக்குனர் மணிரத்னம் உருக்கம்

அவர் தன்னுடைய மறைவுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார்.  எழுத்தாளர் - இயக்குனர் -  நடிகர் என பன்முக திறமை கொண்ட பிரதாப் போத்தனின் மறைவுக்கு, தென் இந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மரியாதை செய்யப்படும் எனவும் கூறினார்.

இவருக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம்,  ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம் மற்றும் ராஜூ மேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரை தவிர நடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor karunas, Entertainment

அடுத்த செய்தி