Home /News /entertainment /

8 வருடங்களுக்குப் பிறகு கரு.பழனியப்பன் இயக்கும் ஆண்டவர்...!

8 வருடங்களுக்குப் பிறகு கரு.பழனியப்பன் இயக்கும் ஆண்டவர்...!

கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன்

முற்போக்கு எண்ணங்களுடன் தமிழில் படம் இயக்குகிறவர்கள் குறைவு. கரு.பழனியப்பன் அதில் ஒருவர். சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, மந்திரப் புன்னகை என அவரது அனைத்துப் படங்களிலும் அறிவுப்பூர்வமான சீண்டல்கள் நிரம்பியிருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
இயக்குனர் கரு.பழனியப்பன் 8 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்குகிறார். படத்துக்கு ஆண்டவர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு எண்ணங்களுடன் தமிழில் படம் இயக்குகிறவர்கள் குறைவு. கரு.பழனியப்பன் அதில் ஒருவர். சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, மந்திரப் புன்னகை என அவரது அனைத்துப் படங்களிலும் அறிவுப்பூர்வமான சீண்டல்கள் நிரம்பியிருக்கும்.

ஒரு கட்டத்தில் படம் இயக்குவதை நிறுத்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றார். இன்று அவர் ஒரு பிரபலமான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். சந்திரா இயக்கியுள்ள கள்ளன் திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் கடைசியாக ஜன்னல் ஓரம் திரைப்படம் வெளியானது. பார்த்திபன், விமல் நடித்திருந்த இந்தப் படம் மலையாளத்தில் வெளியான ஆர்டினரி படத்தின் தமிழ் ரீமேக். 2013 இல் இப்படம் வெளியானது. மிக நீண்ட எட்டு வருட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ளார்.

Also read... வாத்தியார் விஜய் சேதுபதியின் புதிய படங்கள்...!

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு, பிரவீன் எடிட்டிங் என பக்கா டீமுடன் களமிறங்கியுள்ளார். படத்துக்கு வைத்திருக்கும் ஆண்டவர் என்ற டைட்டில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.



கரு.பழனியப்பன் போன்றவர்களின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது. ஆண்டவர் அத்தகைய வெற்றியை பெறும் என நம்புவோம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Karu palaniappan

அடுத்த செய்தி